search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
    X

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்க முயற்சி எடுப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #DoctorStrike #IMAStrick
    சென்னை:

    தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா மருத்துவ சுகாதாரப் பணிகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். நோயாளிகள் பாதிக்கப்படுகிறநிலை உருவாகியிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த மசோதாவினால் ஆறுமாத பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மருத்துவம் படிக்காத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதிப்பதன் மூலம் போலி டாக்டர்களுக்கு அரசே அங்கீகாரம் அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முறையாக மருத்துவபடிப்பு படித்து தேர்ச்சி பெற்ற டாக்டர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதாகும்.

    தனியார் கல்லூரிகளுக்கு 15 சதவீதம், அரசுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு இருந்த நிலையில் இந்த மசோதா நிறைவேறினால் 40 சதவீத இடஒதுக்கீடு அரசுக்கும், 60 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு விடும்.

    தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நிலுவையில் வைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கத் தவறினால் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி பா.ஜ.க. அரசுக்கு கடும் எதிர்ப்பு உருவாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-

    இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மாநில மருத்துவக் கவுன்சில்களைக் கலைத்துவிட்டு, மத்திய அரசின் ஏகபோக ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

    நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண கிராமப் புற ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்துவிட்டது மட்டுமின்றி, மாநிலங்களின் கல்வி உரிமையும் பறிபோய் விட்டது.

    தற்போது கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிராக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ கொண்டுவர முயற்சிப்பதை அனைத்து மாநிலங்களும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைத்து வரும் பா.ஜ.க. அரசு, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக் கும் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    #tamilnews #DoctorStrike #IMAStrick
    Next Story
    ×