search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசாக வழங்க ரூ.28 கோடிக்கு கரும்பு கொள்முதல் - தமிழக அரசு ஏற்பாடு
    X

    பொங்கல் பரிசாக வழங்க ரூ.28 கோடிக்கு கரும்பு கொள்முதல் - தமிழக அரசு ஏற்பாடு

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.28 கோடிக்கு கரும்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PongalFestivel #Sugarcane
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி பரிசுத் தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை 5 கிராம், ஏலக்காய் ஆகியவை வழங்கப்படுகிறது. 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கப்படுகிறது.

    இத்திட்டத்தை வருகிற 5-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காக ரூ.210 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

    ரூ.46 கோடிக்கு 18 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் அரிசி, ரூ.78 கோடிக்கு சர்க்கரையும், ரூ. 56 கோடிக்கு உலர் திராட்சை, முந்திரி கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு 15 கோடிக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக 1.84 கோடி கரும்பு துண்டுகளுக்கு ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளது. அரிசி, சர்க்கரை ஆகியவை அரசே கொள்முதல் செய்து அளிக்கும்.

    கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை மாவட்ட அளவில் கொள்முதல் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்காக கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    கரும்பின் விலையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் இறுதி செய்வார்.

    #tamilnews #PongalFestivel #Sugarcane
    Next Story
    ×