search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து செயல்பட அ.தி.மு.க. மறுப்பு
    X

    புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து செயல்பட அ.தி.மு.க. மறுப்பு

    எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கான அழைப்பை நிராகரித்ததன் மூலம், புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரசோடு இணைந்து செயல்பட அ.தி.மு.க. மறுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் இன்று கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டமன்றத்தில் செயல்படும் விதம் குறித்து கூட்டம் நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று மாலை ஓட்டல் அண்ணாமலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதோடு என்.ஆர்.காங்கிரசின் அழைப்பை அவர்கள் நிராகரித்து விட்டனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணியாக செயல்படவில்லை.

    அப்படியிருக்க சட்டமன்றத்தில் மட்டும் ஏன் கூட்டணியாக செயல்பட வேண்டும்? என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இதனடிப்படையில் என்.ஆர்.காங்கிரசோடு இணைந்து செயல்பட அ.தி.மு.க.வினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் நேற்று மாலை நடைபெறவிருந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
    Next Story
    ×