search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரி காப்பி அடித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
    X

    ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரி காப்பி அடித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரி காப்பி அடித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    சென்னை:

    ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு கடந்த மாதம் நடந்தது. சென்னையில் நடந்த தேர்வில் செல்போன் ‘புளுடூத்’ மூலம் காப்பி அடித்ததாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் பிடிபட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சபீர் கரீம் காப்பி அடிக்க உதவியதாக அவருடைய மனைவி ஜாய்சி, மானேஜர் மற்றும் 2 நண்பர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட ஜாய்சி மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    சபீர் கரீம் காப்பி அடித்த வழக்கை எழும்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சபீர் கரீம் வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொள்வோம்.’ என்றார்.

    Next Story
    ×