search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் ஜாமீன் கோரி மனு
    X

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் ஜாமீன் கோரி மனு

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் ராம்பாபு ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். பணிக்கான முதன்மை தேர்வில் காப்பி அடித்த நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் கைது செய்யப்பட்டார். காப்பி அடிக்க உதவியாக இருந்ததாக அவரது மனைவி ஜாய்சி, நண்பர் ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் ஜாய்சிக்கு எழும்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சபீர்கரீம், ராம்பாபு ஆகியோரின் ஜாமீன் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ராம்பாபு ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சபீர்கரீம் தேர்வில் காப்பி அடித்ததற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×