search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்: டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் 2 பள்ளிகளுக்கு அபராதம்
    X

    நாமக்கல்: டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் 2 பள்ளிகளுக்கு அபராதம்

    நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் 2 பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தார்.
    நாமக்கல் :

    நாமக்கல் மாவட்டத் தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வீடு,வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மேலும் பள்ளி-கல்லூரிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தி டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் 2 பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அந்த 2 பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தார். இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளின் நிர்வாகிகள்,முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி-கல்லூரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆனால் தடுப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கீரம்பூர் அருகே உள்ள நவேதயா பள்ளிக்கும், சின்னவேப்பனம் அருகே உள்ள நே‌ஷனல் பப்ளிக் பள்ளிக்கும் தலா ரூ.25ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. நவோதயா பள்ளியைச் சேர்ந்த 3 குழந்தை களுக்கும், நே‌ஷனல் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு இருந்தது. அவர்கள் சிகிச்சை பெற்றனர்.

    குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகும் அந்த பள்ளிகளில் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பள்ளியை சுற்றி தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் நானே நேரில் சென்று அந்தபள்ளிகளில் ஆய்வு செய்தேன். அந்த 2 பள்ளிகளின் சுகாதாரச் சான்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சட்டத்தின் படி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப் பட்டு உள்ளது.இனிமேலும் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் மெத்தனமாக செயல்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×