search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம்
    X

    சாயல்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம்

    சாயல்குடியில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது.

    கடலாடி:

    சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப்பிரிவு சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வட்டார மருத்துவ அலுவலர் சிவராம பாண்டியன் தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர்கள் சாந்தி, இலக்கியா முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்திபன் டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் முறைகள் குறித்து செயல்முறையுடன் விளக்கி பேசியதுடன் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வந்த உள் நோயாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பஸ் நிலைய வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×