search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்குக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    டெங்குக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு பெண்ணிடம் நகை பறிப்பு

    திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அம்மா பாளையம் கல்லாங்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணிய (வயது 55). இவரது மனைவி சரோஜினி (50). இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் இளம்பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது நாங்கள் சுகாதாரத்துறையில் இருந்து வருகிறோம். இங்கு டெங்கு அதிகளவில் பரவியுள்ளதால் தடுப்பூசி போட வந்துள்ளோம் என்றனர். இதனையடுத்து சரோஜினி ஊசி போட்டுக்கொள்ள சம்மதித்தார். சுப்பிரமணி வீட்டில் உள்ள மாடுகளை வேறு இடத்தில் கட்டச் சென்றார். அப்போது சரோ ஜினிக்கு ஊசி போட்டனர். சிறிது நேரத்தில் சரோஜினி மயங்கினார். இதை பயன்படுத்திய மர்ம நபர்கள் 2 பேரும் சரோஜினி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பினர்.

    சிறிது நேரத்தில் சுப்பிரமணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி மயங்கி கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகைளை காணவில்லை. அப்போது தான் சுகாதாரத்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறிய இளம்பெண்ணும், வாலிபரும் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து மனைவியை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரது கணவர் சேர்த்தார். இது குறித்து சுப்பிரமணி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணையும், வாலிபரையும் தேடி வருகிறார்கள். சுகாதார பணியாளர்கள் போல் நடித்து பட்டப்பகலில் பெண்ணிடம் நகைபறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×