search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பிளவுக்கு சசிகலாவின் அதிகார பசியே காரணம்: எச். ராஜா குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க. பிளவுக்கு சசிகலாவின் அதிகார பசியே காரணம்: எச். ராஜா குற்றச்சாட்டு

    சசிகலாவின் அதீத அதிகார பசியின் காரணமாகவே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா புதுவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புதுவை ஊழல் அரசாங்கத்தினால் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களுக்கும் இடம் கிடைக்காமல் போயுள்ளது.

    புதுவை ஆட்சியாளர்கள் கவர்னரோடு மோதல் போக்கினை கடைபிடித்து ஊழல் செய்து வருகின்றனர்.

    யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு அதிகாரம் அதிகம் உள்ளது. இதை அறிந்து மாநில அரசு இணக்கமாக செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் போராட்டம் குறித்து நீதிபதி கருத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் உட்கட்சி பிரச்சனைகளை வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுவதாக நான் கருதுகிறேன்.

    தினகரன் இருண்டதெல்லாம் பேய் என்ற நோக்கில் இருக்கின்றார். அ.தி.மு.க.வின் எந்த ஒரு செயலிலும் பா.ஜ.க. இல்லை.


    சசிகலாவின் அதீத அதிகார பசியின் காரணமாகவே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா உள்ளார். மன்னார்குடி குடும்பத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். 20-ந்தேதி இதற்கான முடிவு வரும் என எதிர்பார்க்கின்றேன்.

    தி.மு.க. ஆட்சிக்கு வர மறைமுகமாக காங்கிரஸ் உதவுகிறது. கமலஹாசன் அரசியல் கட்சி துவங்குவதற்கு வாழ்த்துக்கள்.

    புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே குறிப்பு கொடுத்துள்ளது. அதை மாநில அரசு செயல்படுத்தும். தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நாராயணசாமி திணிக்கப்பட்டார். மாற்று அரசு வேண்டும் என்றால் காங்கிரசில் பிளவு தேவை. அப்படி ஏற்பட்டால் அதற்கு காரணம் பா.ஜ.க. இல்லை.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
    Next Story
    ×