search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூரில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தபால் அலுவலகம் முற்றுகை: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது
    X

    ஓசூரில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தபால் அலுவலகம் முற்றுகை: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

    ஓசூரில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 19 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், மத்திய. மாநில அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், எம்.ஜி. ரோடில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வாஜித் பாஷா, பொதுச் செயலாளர் அஸ்கர் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர், தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அக்கட்சியினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம், ஹட்கோ இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    Next Story
    ×