search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழப்பாவூரில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    கீழப்பாவூரில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    குடிநீர் கேட்டு கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாவூர்சத்திரம்:

    கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்து, மேலசிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

    அவர்கள் தங்கள் பகுதிக்கு பல மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை, தாமிரபரணி தண்ணீருக்கு தெருவில் கூடுதலாக ஒரு நல்லி அமைக்க வேண்டும், அங்கு பழுதடைந்து உள்ள சின்டெக்ஸ் டேங்க்கை சரி செய்ய வேண்டும், பல நாட்களாக எரியாமல் உள்ள தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் காலி குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து யூனியன் கூடுதல் ஆணையாளர் (கிராம ஊராட்சி) போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சின்டெக்ஸ் டேங்கிற்கு, புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்ததின் பேரில் முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×