search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு மாணவர்கள் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள்: அரசுக்கு கமல் வேண்டுகோள்
    X

    நீட் தேர்வு மாணவர்கள் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள்: அரசுக்கு கமல் வேண்டுகோள்

    நீட் தேர்வு மாணவர்கள் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    நீட் தேர்வில் தமிழக அரசு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க கோரி அவசர சட்டம் இயற்றினால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று மத்திய இணை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு நாளை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், நீட் தேர்வு மாணவர்கள் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பான டுவிட்டில், “நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடயே தனது மற்றொரு டிவிட்டில் உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதில், “உத்தரபிரதேச மாநில குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க உ.பி. முதல்வரை சமூக ஆர்வலர் சத்யார்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது. இந்த இழப்பிற்கு நாடே இரங்கல் தெரிவிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×