search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    தூத்துக்குடி தருவை குளம் சமத்துவபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவை குளம் சமத்துவபுரத்தில் நேற்று மாலை புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்து வந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக டாஸ்மாக் கடையை பூட்டினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம். அல்லது தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடு படுவோம் என பொதுமக்கள் கூறினர்.

    இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தாசில்தார் நம்பிராயர், பொது மக்களிடம் தற்காலிகமாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்படும். நிரந்தரமாக இந்த டாஸ்மாக் கடையை பூட்ட கலெக்டரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



    Next Story
    ×