search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் ஆய்வு
    X

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் ஆய்வு

    வேலூர் நகரில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கந்தசாமி முதலியார் தெருவில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அந்தப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுமுட்டைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

    அங்குள்ள வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளிலும், தேங்காய் ஓடுகள், மட்டைகள், பழைய டயர்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பது குறித்து பார்வையிட்டு, தண்ணீர் தேங்கி நின்றால் அதை அகற்ற பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

    மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தற்போது 40 வார்டுகளில் தினமும் 12 நபர்கள் காலை முதல் மாலை வரை காய்கறி கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கழிவுகளை சேகரிக்க 25 பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை சென்று ஆய்வு செய்கிறார்களா என்பதையும், வீட்டிற்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் குமார், நகர்நல அலுவலர் மணிவண்ணன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×