search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியை கொன்றுவிடும்
    X

    சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியை கொன்றுவிடும்

    உங்களுக்கு, உங்களுக்கு மட்டும், என்றெல்லாம் நினைத்து உங்களை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திக் கொள்ளாதீர்கள். சுயநலத்தில் இருந்து விடுபடுங்கள். பொது நலத்தோடு வாழுங்கள்.
    பொறாமை, அதன் விளைவாக ஏற்படும் சுயநலம் இரண்டுமே மனதை இருட்டாக்கிவிடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்துவிடும். சுயநலம் நல்ல குணம் அல்ல. சுயநலம் கொண்டவர்களிடம் தன்னைவிட மற்றவர்கள் முன்னுக்கு வந்துவிடுவார்களோ என்ற பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்து தவிப்பார்கள்.

    இன்று பெரும்பாலானவர்கள் அதிகப்படியான மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம். சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியை பற்றி சிந்திக்கமாட்டார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியை பற்றி பொறாமைபட்டுக்கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்றுதான் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

    சமீப காலமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் சுயநலம் மற்றும் பொறாமை பற்றி நிறைய புத்தகங்கள் எழுதுகிறார்கள். அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. அதில் உள்ள கருத்துக்கள் அனைவரையும் சிந்திக்கவைக்கின்றன.

    அந்த புத்தகங்களில் உள்ள முக்கியமான கருத்து என்னவென்றால், “எவ்வளவுதான் வேண்டப்பட்டவர் களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் நம்மைவிட ஒருபடி மேலே போய்விடக்கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்” என்பதுதான். இந்த எண்ணம் உங்களிடமும் இருந்தால் நீங்கள் சுயநலத்திற்கும், பொறாமைக்கும் ஆட்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    பாராட்டு என்பது தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. மற்றவருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் சுயநலக்காரர்கள் கவனமாக இருப்பார்கள். இந்த மனநிலை அவர்களை மன இறுக்கத்தில் கொண்டுபோய்விட்டுவிடும். ‘எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்’ என்ற நல்ல எண்ணத்தை, சுயநலம் மறைத்துவிடுகிறது. நம் மனதின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்படும்போது நாம் மற்றவர் பார்வைக்கு அசிங்கமாக தெரிவோம். இந்த சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியை கொன்றுவிடும்.இப்படித்தான் பொறாமை உணர்வு வந்துவிட்டால் அதனை பல காலம் அமுக்கிவைக்க முடியாது. எப்படியாவது அது வெடித்துச் சிதறி வெளியே வந்து கடுமையான பின்விளைவுகளை உருவாக்கிவிடும்.



    சுயநலமான சிந்தனை ஒருவரை தரக்குறைவாக நடந்துகொள்ளும்படி செய்துவிடும். மற்றவர்கள் மனம் புண்படும்படி நடந்துகொள்வதில் அவர்களுக்கு ஒருவித குரூர திருப்தி ஏற்படும்.

    ஆனால் இதில் அவள் அடைந்த லாபம் என்ன? நல்ல நட்பை இழந்ததுதான் மிச்சம். இந்த சுயநலம் நட்பு, உறவு, அலுவலகம், அண்டை வீடு என்று எல்லா இடங்களிலும் இருக்கும். சாதாரணமாக வெளியே தெரியாது. அதற்கென்று ஒரு சந்தர்ப்பம் வரும்போது வெளிப்பட்டு நம்மை திகைக்க வைக்கும். இவர்களா இப்படி என்று நினைக்கத் தோன்றும்.

    சுயநலம் என்பது இயலாமையின் எதிர்விளைவு. மற்றவர் களைவிட சிறப்பாக நாம் வாழ முடியும் என்று தோன்றும்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அது முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டால், இயன்றவரை மற்றவர் முன்னுக்கு வருவதையாவது தடுக்கலாமே என்ற எண்ணம் உருவாகிவிடும்.

    சுயநலம் ஒருவரை மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடும். நட்பு, உறவு, எல்லாமே நம்மை ஒதுக்கிவைக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். அப்போது இன்னும் மனம் இறுகிவிடும். வாழ்க்கையே பதற்றமாகிவிடும்.

    நாம் செய்யும் சிறு உதவியால் யாரும் மலையளவு உயர்ந்துவிட முடியாது. எல்லோருக்கும் சொந்த முயற்சி, அறிவுத்திறன் எல்லாம் உண்டு. நாம் செய்யும் அந்த சிறு உதவி கிடைக்காவிட்டாலும் அவர்கள் வளர்ச்சியை நம்மால் தடுத்துவிட முடியாது. அதனால் மற்றவர்களுக்கு உதவ மனமில்லாவிட்டாலும், அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம்.

    ஒருமுறை இந்த சுயநலம் என்ற பிசாசிடமிருந்து விடைபெற்று பாருங்கள். யாருக்கும் பெரிதாக சிரமப்பட்டு எதையும் செய்துவிட வேண்டாம். பரந்த மனதோடு மற்றவர்கள் வளர்ச்சியை ஏற்றுகொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சி தானே நடைபெறும். உங்களுக்கு, உங்களுக்கு மட்டும், என்றெல்லாம் நினைத்து உங்களை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திக் கொள்ளாதீர்கள். சுயநலத்தில் இருந்து விடுபடுங்கள். பொது நலத்தோடு வாழுங்கள்.
    Next Story
    ×