search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண்ணை கவரும் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள்
    X

    கண்ணை கவரும் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள்

    இன்றைய இளம்பெண்களின் மனம் மற்றும் கண்களை கவரும் வகையில் உள்ள புடவை வகைகளில் ஒன்று மார்பிள் ஜக்கார்ட் புடவைகள்.
    இன்றைய இளம்பெண்களின் மனம் மற்றும் கண்களை கவரும் வகையில் உள்ள புடவை வகைகளில் ஒன்று மார்பிள் ஜக்கார்ட் புடவைகள். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதியாகும் இந்த புடவை வகையை, வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்கள் மட்டுமின்றி அந்த நாட்டு பெண்களும் விரும்பி வாங்குகின்றனர். இதற்கு காரணம் இந்த துணியின் தன்மையும், அதில் செய்யக்கூடிய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் தான்.

    மிக மெல்லிய, வழுவழுப்பான இந்த மார்பிள் ஷிப்பான் துணிகளில் அதன் நிறத்திலேயே உடல் முழுவதும் நெருக்கமாக அமைந்திருக்கும் டிசைன் தான் மார்பிள் ஜக்கார்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த புடவையில் துணி வழுவழுப்பாகவும், லேசான மினுமினுப்புடன் மெல்லியதாக இருப்பதால் இதற்கு மார்பிள் ஷிப்பான என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    இந்த மார்பிள் ஜக்கார்ட் புடவையின் உட்புறமே மிக நேர்த்தியான அழகுடன் இருக்கும். அதை மேலும் கவர்ச்சியாகவும், அழகாகவும் ஆக்குகிறது அதில் செய்யப்பட்டிருக்கும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள். பல வண்ணங்களில் உள்ள பட்டு நூல்கள், ஜரிகை நூல்கள், சம்கி, பொடி கண்ணாடிகள், மணிகள், கற்கள் குந்தன் மணிகள் போன்றவைகள் கொண்ட இந்த ஜரிகை வேலைப்பாடுகள் இதை டிசைனர் புடவையாக மாற்றுகிறது.

    பொதுவாக இந்த புடவைகளில் முந்தானை மற்றும் புடவையின் பார்டர்களில் மட்டும் தான் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஜக்கார்ட் வேலைப்பாடு என்பது புடவைத் துணியிலேயே நெய்யப்பட்டதாகவே அல்லது அதே நிறத்திலோ வேறு நிறத்திலோ (கான்ட்ராஸ்ட்) அதே நூலின் வேலைப்பாடு கொண்டதாகவோ இருக்கும். அடர்த்தியான நூல் வேலைப்பாட்டை உடல் முழுவதும் கொண்டதாகவும் இந்த வகை புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    மார்பிள் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள், இரண்டு பகுதிகள் இரண்டு நிறங்கள் கொண்டதாகவும், புடவையின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் இருவேறு நிறங்கள் கொண்டதாகவும் கூட வரும். இளம் வண்ண நிறங்கள் முதல் அடர்த்தியான நிறங்கள் கொண்டதாகவும் இப்புடவை வகை கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலும் ‘பேஸ்டல் கலர்ஸ்’ என்றழைக்கப்படும் வெளிர் நிறம் கொண்ட புடவைகளில் ஜொலிக்கும் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளையே இளம்பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.

    விருந்துகளுக்கு, வரவேற்புகளுக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு என்று மட்டுமின்றி திருமணத்தில் மணப்பெண்களுக்கும் கூட இந்த மார்பிள் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள் பொருத்தமாகவும், எடுப்பாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன.
    Next Story
    ×