search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சன்டே ஸ்பெஷல்: பள்ளிபாளையம் மிளகாய் சிக்கன்
    X

    சன்டே ஸ்பெஷல்: பள்ளிபாளையம் மிளகாய் சிக்கன்

    நாளை (ஞாயிற்றுகிழமை) காய்ந்த மிளகாய் சேர்த்து பள்ளிபாளையம் ஸ்டைலில் சிக்கன் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இதை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ (எலும்பு, தோல் நீக்கியது)
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய் - தேவையான அளவு,
    சோம்பு - 1/2 தே.கரண்டி அல்லது சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
    காய்ந்த மிளகாய் - 8 (காரத்திற்கு ஏற்ப)
    பூண்டு - 5 பல்.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி வைக்கவும்.

    சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயினை இரண்டாக உடைத்து அதில் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும். (காரம் விரும்புபவர்கள் அதிகம் விதைகள் நீக்க தேவையில்லை.)

    கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
     
    வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அத்துடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி அத்துடன் சிறிது தண்ணீர் தெளித்து(சுமார் 2 மேஜை கரண்டி அளவு) அதனை தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

    சிக்கன் நன்றாக வெந்த பிறகு துருவிய தேங்காயினை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
    .
    கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.  

    சுவையான பள்ளிபாளையம் மிளகாய் சிக்கன் ரெடி.

    இதனை அப்படியே சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். கலந்த சாதம், சாம்பார், ரசம் போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×