search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரத்த சோகையை குணமாக்கும் பிஸ்தா
    X

    இரத்த சோகையை குணமாக்கும் பிஸ்தா

    சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன.
    சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே... புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.

    சத்துக்கள் பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

    இதில் உள்ள கரோட்டீன்ஸ், வைட்டமின் இ போன்றவை மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்படுகின்றன. உடலில் ஆக்ஸிஜன் பயன்படுத்துதலினால் ஏற்படும் நச்சுக்களை நீக்கி, பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் இதர வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து காக்கிறது.



    பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதத்தை உடைக்கும் செயல்பாட்டை துரிதப்படுத்தி அமினோ அமிலமாக மாற்றுகிறது.

    வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) ரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. பிஸ்தாவில் நிறைவான அளவில் வைட்டமின் பி6 உள்ளது, இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் நன்றாக வேலை செய்யத் தூண்டுகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுவது அதிகரிக்கிறது.

    பிஸ்தா எண்ணெய் மிகச் சிறந்த இயற்கை மாய்ச்சரைசராகவும் பயன்படுவதால், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாக்கி பளபளப்பைக் கூட்டுகிறது. இதனால் இளமைப்பொலிவு கூடும்.

    தேவை: தினமும் 4 பிஸ்தா எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவில் அன்றைய தினத்துக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
    Next Story
    ×