search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாதாரண வயிற்று வலிக்கும் பிரச்சனைக்குரிய வலிக்கும் என்ன வித்தியாசம்?
    X

    சாதாரண வயிற்று வலிக்கும் பிரச்சனைக்குரிய வலிக்கும் என்ன வித்தியாசம்?

    வயிற்றுவலி என்பது சாதாரண உடல்நலத் தொந்தரவு மட்டுமே அல்ல.தொடர் வயிற்று வலிகள் இயற்கையானதே என சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    ‘‘வயிற்றுவலி என்பது ஜலதோஷம் போல ஏதோ வந்துவிட்டுப் போகும் சாதாரண உடல்நலத் தொந்தரவு மட்டுமே அல்ல. பெரும்பாலானோருக்கு ஏற்படும் வயிற்றுவலியானது வேறு சில பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். தொடர் வயிற்று வலிகள் இயற்கையானதே என சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    ‘‘திடீரென தோன்றும் வயிற்று வலிகள் ஒரு சில மணி நேரத்தில் அல்லது ஓரிரு நாட்களில் மறைந்துவிடும். ஆனால், தொடர் வயிற்றுவலிகள் அல்லது தினமும் வயிற்று வலி ஏற்படுவோர் அதை கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர்.

    சாதாரண வயிற்று வலிகள் அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படுபவை. அவற்றில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது. தொடர் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை தேவை.’’

    ‘‘சாதாரண வயிற்று வலிகள் உணவின் காரணமாகவே பெரும்பாலும் ஏற்படுகிறது. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள நேரும்போது வயிற்று வலிகள் ஏற்படும். இதுபோன்ற வயிற்றுவலிகள் இரவு நேரங்களில்தான் வருகின்றன. தாமதமாக உண்பது, அளவுக்கு அதிகமாக உண்பது போன்ற காரணங்களால் இந்த இரவு நேர வயிற்றுவலிகள் ஏற்படுகின்றன.’’



    ‘‘சிலருக்கு உணவுக்குழாயும் உணவுப்பையும் சேரும் இடத்தில் வலி ஏற்படலாம். இது தவறான உணவுப் பழக்க வழக்கம் அல்லது அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஏற்படுகிறது. அதிகமாக உணவு உட்கொள்வது, இரவு நேரங்களில் அசைவ உணவு உண்பது, அதிகம் எண்ணெய் மற்றும் காரம் சேர்த்த உணவை உண்பது Gastroesophageal reflux disease, Irritable bowel syndrome போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் மற்றும் மேல் வயிற்றில் வலி ஏற்படுகின்றன.’’

    ‘‘வயிற்றுவலிகள் சில நோய்களின் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் தோன்றும் கல், அல்சர், வாயு பிரச்னைகள் போன்றவற்றின் தொடக்கமாகவும் இருக்கும். சரியான உணவுப் பழக்கவழக்கத்தின் மூலம் இவற்றிலிருந்து வெளியே வரலாம். இதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் நோயின் பிரச்னை தீவிரமடையும்.’’

    ‘‘தொடர் அல்லது தீவிர வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு. தானாகவே மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தானாகவே மருந்து எடுத்துக் கொள்ளும்போது அது உடலில் வேறு ஏதேனும் பிரச்னை இருப்பின் அவற்றை மேலும் தீவிரப்படுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    திடீரென தோன்றும் சாதாரண வயிற்றுவலிகளுக்கு உணவுமுறையை நெறிப்படுத்தினாலேயே மாற்றங்களைக் காணலாம். சரியான நேரத்துக்கு உண்பது, உணவு உட்கொண்ட 2 மணி நேரம் கழித்து உறங்குவது, தினமும் உடற்பயிற்சிகள் செய்வது போன்றவை.குழந்தைகளுக்கு தொடர் வயிற்று வலி ஏற்படும்போது குழந்தை நல மருத்துவரிடம் சென்று அவர்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளிவர மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து கொடுப்பதும் நல்லது.’’

    Next Story
    ×