search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் வாழ்வை மாற்றும் பாடத்திட்டம்
    X

    மாணவர்களின் வாழ்வை மாற்றும் பாடத்திட்டம்

    தனிமனித ரீதியாகவும், அரசியல், பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவக் கூடியதாக புதிது புதிதாக வரும் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
    கல்வி தான் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் கருவி. கல்வி கற்பதில் சிறந்து விளங்கினால் தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். அதற்காக எவ்வளவும் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு என்பது அத்தனை இனிமையாக இல்லாத நிலையே உள்ளது.

    எனவே மாணவர்கள் பள்ளிக் கூடங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பாடங்களை விரும்பி படிக்க கூடிய வகையில் தயாரிக்க வேண்டியது அவசியம். அதோடு மாறி வரும் சூழலில் மாணவர்கள் படிக்கும் பாடங்கள் உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எத்தகைய போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ள பலம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று கருத்து பலமாக எழுந்து உள்ளது. அப்படி செய்வதன் மூலம் தான் தமிழக மாணவர்களை தரம் உயர்த்த முடியும். கல்வியின் பயனும் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதைபூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசும், கல்வித் துறையும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

    அந்த வழிமுறையின்படி தான் பாடத்திட்டம், வினாத்தாள், தேர்ச்சி முறை போன்றவற்றில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு படிப்பின் மீதானஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் தரம் உயர்த்தப்பட்ட கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். அதை நோக்கமாக கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.



    வலுவான பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள்தான் போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ள முடியும். போட்டித்தேர்வுகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. அதுபோன்ற நிலையில் தமிழக மாணவர்கள் தங்களின் இடங்களையும், வாய்ப்புகளையும் காத்துக் கொள்ள வேண்டும். அதோடு புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்படும் பாடங்களின் உட்பொருளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நாட்டில் மாறி வரும் கல்விச் சூழல், தேர்வு முறைக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அது ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்து மாற்றி அமைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்படி பாடத்திட்டங் களை மாற்றுகிற போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தொடர்ந்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கல்வித்துறைக்கு உள்ளது.

    மாணவர்கள் எப்போதும் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கல்வித்துறையில் ஏற்படுத்துகிற மாற்றம் தான் சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தனிமனித ரீதியாகவும், அரசியல், பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவக் கூடியதாக புதிது புதிதாக வரும் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
    Next Story
    ×