search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை
    X

    திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழம் பெருமை வாய்ந்த கோவில்களில், திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில் திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால், மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் என்று இங்குள்ள மூலவர் அழைக்கப்படுகிறார்.

    இந்த கோவிலில், மூலவர், தாயார், ஆண்டாள், பிள்ளையார், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நவக்கிரகத்துக்கு என தனித்தனி சன்னதிகளும், சுமார் 25 ஆடி உயரத்தில், கருடாழ்வாருக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2,000-ம் ஆண்டில் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பொதுவாக எந்த ஒரு கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்து பிறகு, மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என ஆகம விதிகள் கூறுகிறது. ஆனால் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் ஆன பிறகும் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, கோவில் கட்டுமான திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு ஆகும் செலவை பக்தர்கள் நன்கொடையாக வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், அதற்கான முழு முயற்சிகள் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் தாலுகா ஆபீஸ் சாலையில் இருந்து கோவில் சுமார் 5 அடி பள்ளத்தில் இருப்பதாகவும், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் போது சாலையின் மட்டத்தை விட கோவிலை உயர்த்தி கட்ட வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற அதிகாரிகள் உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×