அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைய வாய்ப்பு..!- முன்னாள் அமைச்சர் கருப்பணன்

ஒரு சில பொறுப்பாளர்கள் ஆசைக்காக த.வெ.க.வுக்கு சென்றுள்ளனர்.
KC Karuppanan
Published on

ஈரோடு அ.தி.மு.க மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் பேசும்போது, அ.தி .மு.க. நன்றாகத்தான் உள்ளது. ஒரு சில பொறுப்பாளர்கள் ஆசைக்காக த.வெ.க.வுக்கு சென்றுள்ளனர்.

பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் த.வெ.க-வுக்கு சென்றபோது அவருடன் 50 நபர்கள் தான் த.வெ.க-வுக்கு சென்றுள்ளனர்.

போனவர்கள் போகட்டும். த.வெ.க.வின் வெற்றி எதிர்பாராதது. தி.மு.க எந்த நல்ல திட்டம் செய்யவில்லை, வாக்குறுதி செய்யவில்லை, த .வெ.க. குறைந்த வாக்குகள் பெறுவார்கள் என்ற கணக்கு தவறாகிவிட்டது.

18 வயது முதல் 25 வயதினர் த.வெ.க-வுக்கு வாக்கு செலுத்தினர். செல்போனில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பார்த்து த.வெ.க.வுக்கு வாக்களித்து விட்டனர். சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது.

தலைவர் வழியில் தொண்டர்கள் இருப்பதால் தற்போது நிலை உள்ளது. அதிகாரிகள் கைக்கட்டி இருப்பதால் எந்த நல்லது செய்யமுடியவில்லை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவரும் ஒன்றுசேரவு ள்ளனர்.

கடந்த அரசை விட தவெக அரசு மோசமாக உள்ளது. மத்திய அரசு எதிர்த்து சிறப்பாக செயல்படமுடியாது. கூடிய விரைவில் தவெக அரசு கவிழ வாய்ப்புள்ளது. வரும்காலத்தில் திமுகவின் நிலை அதிமுகவை விட மோசமாக இருக்கும்" என்றார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது:-

மாற்றத்தின் போது நிர்வாகிகள் கட்சி மாறுவது நடப்பது தான்.அ.தி.மு.க .தொண்டர்கள், பொறுப்பாளர்கள் யாரும் கட்சி மாறுவதில்லை முன்னாள் அமைச்சர்கள்தான் செல்கின்றனர்.

அவர்கள் செய்த தவறை மறைக்க வும்,சொத்தை காப்பா ற்றவும்,வழக்கில் இருந்து தப்பிக்கவும் தவெகவுக்கு செல்கின்றனர்.

த.வெ.க.வில் இணைவதற்கு இதுதான் காரணம்

அதிமுக-திமுக கூட்டணி முயற்சித்ததை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.அதிமுகவில் யாரு வந்தாலும் சேர்ப்போம் ஒன்றிணைவோம்.டிடிவி மற்றும் சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.

டிடிவி சசிகலா அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளது. என்றார்.த.வெ.க .குதிரை பேரத்தில் ஈடுபடாமல் எப்படி அ.தி.மு.க .எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தவுடன் த.வெ.க.வில் இணைவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார்.அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள் கோரிக்கை

அ.தி.மு.க.வில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் சசிகலாவையும் டி.டி.வி. தினகரனையும் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com