தேர்தல் கூட்டணிக்காக Vijay வீட்டு வாசலை இ.பி.எஸ். தட்டிக்கொண்டிருக்கிறார் - ஓ.பி.எஸ். விமர்சனம்

தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பார்.
தேர்தல் கூட்டணிக்காக Vijay வீட்டு வாசலை இ.பி.எஸ். தட்டிக்கொண்டிருக்கிறார் - ஓ.பி.எஸ். விமர்சனம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

தேர்தல் கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை எடப்பாடி பழனிசாமி தட்டிக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் அதிமுகவை குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்.

அனைவரையும் ஒரு தாய் மக்களாக அரவணைத்து எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் திறம்பட ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர்கள். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல. நாமினி முதலமைச்சர்.

தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பார் என்றார்.

கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர, ஒன்றிய, வத்திராயிருப்பு நகர, ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com