NEET, பெட்ரோல் டீசல் விலை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாரா இபிஎஸ்? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

தி.மு.க. ஆட்சியில் தான் வடசென்னைக்கான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
NEET, பெட்ரோல் டீசல் விலை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாரா இபிஎஸ்? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி
Published on

எழும்பூர்:

சென்னை மயிலாப்பூரில் நேற்றைய தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடும்பத்திற்கு ரூ.4000 கொடுத்தவர் முதலமைச்சர்.

* தி.மு.க. ஆட்சியில் தான் வடசென்னைக்கான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

* 5 ஆண்டுகளில் வட சென்னையில் மட்டும் 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. வட சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும்.

* முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை, வெள்ள காலத்தில் மக்களை சந்திக்காதவர் எடப்பாடி பழனிசாமி.

* சென்னையில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்காது என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் சென்னை தத்தளித்தது.

* நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்தாரா?

* தமிழிசை காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இது குடும்ப அரசியல் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com