பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தானா?- கனிமொழி கேள்வி

இளம்பெண்ணொருவர் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்பட்டு, படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கனிமொழி
Published on

சினிமா பாணியில் தவெக அரசு தொடங்கிய பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தானா? என்று தமிழக அரசை நோக்கி கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் மீது தாக்குதல்

தருமபுரியில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்தியவரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். காயம்அடைந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிர்ச்சி

அந்த வகையில், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தருமபுரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பேருந்து நிலையத்திற்குள், இளம்பெண்ணொருவர் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்பட்டு, படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சினிமா பாணியில் தவெக அரசு தொடங்கிய பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் விளம்பரத்திற்கு மட்டும் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com