சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்
Published on

சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்டை உடனே நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com