மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி நிதியை பெற்றே தீருவோம்: நாராயணசாமி அறிவிப்பு

புதுவை மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி சிறப்பு நிதியை பெற்றே தீருவோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி நிதியை பெற்றே தீருவோம்: நாராயணசாமி அறிவிப்பு
Published on

புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் குபேர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.  குபேர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மாநிலத்தின் உரிமைகளை மத்திய பா.ஜனதா ஆட்சியில் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. மக்கள் நலத்திட்டங்களுக்கு சிலர் வேண்டுமென்றே முட்டுகட்டை இடுகின்றனர்.

புதுவை மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் சிறப்பு நிதி கேட்டு வருகிறோம். ரூ.1000 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றே தீருவோம். சில சக்திகள் மாநில வளர்ச்சியை தடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இதனை முறியடிப்போம்.

புதுவையில் 100 அடி ரோடு ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது.

இடையில் வந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர். பின்னர் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் திட்டத்தை விரைந்து முடித்து மேம்பாலத்தை திறந்துள்ளோம்.

புதுவை வடமாநிலம் இல்லை. இங்கு ஜனநாயகம் உரிமை உள்ளது. இதனை பறிக்க யார் முயற்சித்தாலும் எதிர்த்து போராடுவோம். காங்கிரஸ் கட்சி எந்தவித மிரட்டலுக்கும் அடிபணியாது. மதவாத சக்திகளை புதுவை மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்கலாம் என்ற என்.ஆர்.காங்கிரசின் எண்ணம் பலிக்காது. அதனை முறியடிப்போம் மக்கள் தீர்ப்பிற்கு தலை வணங்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com