search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    UFS விவகாரம்.. போன் பிடிக்கலையா? கொடுத்துட்டு காசை வாங்கிக் கோங்க.. ஒன்பிளஸ்
    X

    UFS விவகாரம்.. போன் பிடிக்கலையா? கொடுத்துட்டு காசை வாங்கிக் கோங்க.. ஒன்பிளஸ்

    • வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
    • சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி மாடலில் UFS 3.1 ரக ஸ்டோரேஜ் வழங்கியுள்ளதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் போது, இதில் UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது.

    இந்த விஷயம் அம்பலமானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனினை வாங்கியவர்கள் மற்றும் முன்பதிவு செய்தவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒன்பிளஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.


    தற்போது, ஒன்பிளஸ் 12R மாடலின் 256 ஜி.பி. மெமரி மாடலை வாங்கியவர்கள் சாதனத்தை பயன்படுத்தியதில் திருப்தி அடையவில்லை எனில், மார்ச் 16-ம் தேதிக்குள் தங்களது சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம் என்று ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.

    Next Story
    ×