search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஸ்கொயர் வடிவம், Extend ஆகும் டிஸ்ப்ளே.. வேற லெவலில் உருவாகும் சாம்சங் சாதனம்
    X

    கோப்புப்படம் 

    ஸ்கொயர் வடிவம், Extend ஆகும் டிஸ்ப்ளே.. வேற லெவலில் உருவாகும் சாம்சங் சாதனம்

    • புதிய சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
    • தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.

    சாம்சங் நிறுவனம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டென்ட் ஆகும் வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.

    அதில் புதிய சாதனம் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதும், தானாக நீட்டித்துக் கொள்ளும் டிஸ்ப்ளே ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே, சாதனத்தில் இருந்து நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் இரண்டு தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.


    காப்புரிமைகளில் இரு தொழில்நுட்பங்களும்- ஃபிளெக்ஸ் மேஜிக் மற்றும் ஃபிளெக்ஸ் மேஜிக் பிக்சல் என்ற பெயர் கொண்டிருந்தன. இவை ஐரோப்பிய காப்புரிமை பதிவுக்கான தளம் மற்றும் ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த தொழில்நுட்பங்கள் "ஸ்மார்ட்போன்களுக்கான நீளும் ஸ்கிரீன்" என குறிப்பிடப்பட்டுள்ளன.

    அமெரிக்க காப்புரிமை வலைதளத்திலும் இதே போன்ற தொழில்நுட்பம் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவற்றில் இத்தகைய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. காப்புரிமை தகவல்களின் படி புதிய டிஸ்ப்ளே பல்வித மூலைகளில் இருந்து நீட்டித்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. காப்புரிமையில் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    எனினும், அதில் உள்ள தகவல்கள் இது அத்தகைய வடிவம் கொண்ட சாதனம் தான் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதுதவிர இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டி.வி., ஏ.ஆர். எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவைகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×