search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    குறைந்த பட்ஜெட்டில் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் சாம்சங்

    • விவரங்கள் பி.ஐ.எஸ். இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
    • ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய மிட் ரேன்ஜ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில், கேலக்ஸி F55 5ஜி, கேலக்ஸி M55 5ஜி மற்றும் கேலக்ஸி C55 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. இவற்றில் கேலக்ஸி F55 5ஜி மாடல் விவரங்கள் பி.ஐ.எஸ். இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.

    புதிய கேலக்ஸி F55 5ஜி மாடல் SM-E556B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பி.ஐ.எஸ். வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெற்று இருக்காது. எனினும், இந்த வலைதளத்தில் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்க முடியும்.

    கோப்புப்படம்


    கடந்த வாரம் கேலக்ஸி F55 5ஜி மாடலின் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி M55 5ஜி மற்றும் கேலக்ஸி C55 5ஜி மாடல்களும் இடம்பெற்று இருந்தன. கீக்பென்ச் விவரங்களின் படி கேலக்ஸி M55 5ஜி மாடலில் அட்ரினோ 644 GPU, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சி.பி.யு. வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி M54 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி F55 5ஜி மாடல், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி F54 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் கேலக்ஸி F55 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×