search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அமேசானில் விற்பனை.. அந்த பிராசஸர் கொண்ட முதல் இந்திய ஸ்மார்ட்போன்.. ஐகூ அசத்தல்
    X

    அமேசானில் விற்பனை.. அந்த பிராசஸர் கொண்ட முதல் இந்திய ஸ்மார்ட்போன்.. ஐகூ அசத்தல்

    • இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும்.

    ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி இந்திய சந்தையில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன் இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஐகூ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ போஸ்டரில் தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்காக ஐகூ நிறுவனம் பி.எம்.டபிள்யூ. M மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    கூட்டணியின் அங்கமாக ஐகூ 12 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்கள் அடங்கிய ஸ்டிரைப் டிசைனில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பாக ஐகூ 12 மற்றும் ஐகூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும் என்று தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் OLED பேனல், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், ஆப்டிக்கல் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் ஒரிஜின் ஒ.எஸ். 4, இந்திய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜி.பி. வரையிலான ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 64MP லென்ஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×