search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெட்போன்"

    • தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
    • இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண், மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது.

    ஒவ்வொரு நாளும் நம்முடைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் `ஸ்மார்ட் ஃபோன்கள்'. ஆம்...! இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருடைய கைகளிலுமே புகுந்து விளையாடுகிறது இந்த `ஸ்மார்ட்' போன்கள்.

    செல்போன் உடன், அதன் இணைபிரியா நண்பனாக காதில் மாட்டிக்கொள்ள இயர்போன் கட்டாயம் கையில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு. இதன் பயன்பாடு காரணமாக 1.1 பில்லியன் இளைய தலைமுறையினர் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கதிர்வீச்சு காது கேளாமைக்கு காரணமா...?

    செல்ஃபோனை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் பார்வை பாதிப்படைகிறது. ஆனால் அதேநேரத்தில் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது. செல்ஃபோன் அழைப்புகளின் போது `ரேடியோ ஃப்ரீக்வன்ஸி' எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளிப்படும். இது அதிகளவிலான பாதிப்பை உண்டாக்கும். அதாவது, ஒருவரின் மூளை வரை சென்று பாதிப்பை உண்டாக்கக் கூடியது. இந்த கதிர்வீச்சுகளின் வேகமானது குறையவும் செய்யலாம், கூடவும் செய்யலாம் அது முழுக்க முழுக்க அவரவர் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தது.

     தொடர்ந்து பாடல் கேட்பது தவறா...?

    காதுகளில் இயர்போன்களை மாட்டிக்கொண்டு பேசுவதைக் காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதையே பலரும் விரும்புகிறார்கள். தொடர்ந்து அதிக நேரம் பாடல்கள் கேட்கும் போது நம்முடைய காதுகள் செவித்திறனை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் காதுகளின் உயிரணுக்களின் உணர்ச்சி நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும். இதனை மீண்டும் சரிசெய்ய சாத்தியமே இல்லை. இதனால் நிரந்தர காது கேளாமை கூட ஏற்படலாம்.

    மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறலுக்கு என்ன காரணம்...?

    இயர்போன்களை பயன்படுத்துவதை ஒரு அன்றாட பழக்கமாகக் கொள்வது ஒருவரது சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதட்டம் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இறுதியாக நம்முடைய மனஅமைதி கெடும். அதுபோக, இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால் சாதாரணமாக கவனம் செலுத்துவதில்கூட குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

    இயர்போன்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா...?

    இயர்போன்களை அதிகநேரம் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பதால் காதுகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் இதயம் வேகமாக துடிக்கும். அதோடு இதயம் சார்ந்த அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

     பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:

    சத்தங்கள் டெசிபல் என்ற அளவீடுகளில் அளக்கப்படுகின்றன. அதாவது 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காதுகள் பாதிப்பு அடைவதில் இருந்து பாதுகாக்கப்படும். ஆனால், 85 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடிய சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். எனவே, 60 டெசிபலுக்கு குறைவாக பயன்படுத்துவது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்காது.

    ஹெட்போனோ அல்லது இயர்போனோ... தொடர்ந்து கேட்காமல் இடைவெளிவிட்டு கேட்பது நல்லது. அதாவது அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிட ஓய்வும் அதே நேரத்தில் ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிட ஓய்வும் கொடுக்க வேண்டும். இயர்போனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும்.

    • ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
    • ஹார்மன் இண்டர்நேஷனல் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஜெபிஎல் பிராண்டு ஏராளமான சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.

    சாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிடெட் அங்கம் ஹார்மண் இண்டர்நேஷனல் ஆட்டோமோடிவ், நுகர்வோர் மற்றும் தொழில்துறை செயலிகள், கனெக்டெட் தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. வளர்ந்து வரும் ஹெட்போன் சந்தையில், அதிக தரமுள்ள ஆடியோ சாதனங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டதோடு, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததன் அங்கமாக ஜெபிஎல் பிராண்டு 20 கோடி ஹெட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது.

    ஆடியோ பிரிவில் ஒவ்வொருத்தரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த தசாப்தத்தை கடந்து வந்துள்ளதாக ஜெபிஎல் தெரிவித்து இருக்கிறது. 2020 முதல் ஹெட்போன்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது. பெருந்தொற்று காரணமாக ஹெச்டி மியூசிக் ஸ்டிரீமிங், இன்-கேம் மியூசிக், பாட்காஸ்ட், வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை என வாழ்க்கை முறை முழுவதும் வீட்டை சார்ந்தே மாறி போயின.

    இதன் காரணமாக தற்போதில் இருந்து 2028-க்குள் ஹெட்போன் சந்தையில் 17.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது ஜெபிஎல் முடிவுகளிலும் எதிரொலிக்கும். இரண்டாவது காலாண்டு வாக்கில் சர்வதேச ஜெபிஎல் நிறுவனம் முன்னிலையில் இருந்தது. இதன்படி ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் ஜெபிஎல் முன்னணி ஆடியோ பிராண்டாக உள்ளது. சமீபத்தில் தான் ஜெபிஎல் டியூன் ஃபிளெக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க செய்வதில் கவனம் செலுத்திய நிறுவனங்களில் முதன்மையானதாக ஜெபிஎல் இருக்கிறது. ஜெபிஎல் பிராண்டு ஹெட்போன்கள் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஹெட்போன்கள் பலதரப்பட்ட பயனர்களுக்கும் சிறப்பான தேர்வாக அமைந்தது.

    • நத்திங் நிறுவனம் ஒவர் தி இயர் ரக ஹெட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மேலும் இந்த ஹெட்போனின் கான்செப்ட் ரெண்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் அடுத்த புதிய சாதனம் ஹெட்போன்களாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆடியோ சாதனத்தின் கான்செப்ட் ரெண்டர் படங்களை நத்திங் நிறுவனர் கால் பெய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ரெண்டர்களை யான்கோ டிசைன் எனும் ஆன்லைன் இதழ் உருவாக்கி இருக்கிறது.

    கால் பெய் இவற்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு, இதனை உருவாக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு ட்விட்டரில் பலரும் இதை அறிமுகம் செய்யுங்கள் என பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஹெட்போன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் நிறுவன ஹெட்போன் நத்திங் ஹெட் (1) என அழைக்கப்படலாம்.

    ரெண்டர்களில் உள்ள நத்திங் ஹெட் (1) பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது போன் (1) மற்றும் இயர் (1) போன்றே இந்த ரெண்டர்களில் உள்ள ஹெட்போனும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் க்ளிம்ப் இண்டர்பேஸ் போன்று இயர்கப்களை சுற்றி எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன.

    ஹெட்போனுடன் சார்ஜிங் ஸ்டாண்ட் ரெண்டரையும் யான்கோ டிசைன் வெளியிட்டு இருக்கிறது. இதில் வயர்லெஸ் காயில்கள் உள்ளன. இத்துடன் ஸ்டாண்டின் பின்புறம் சார்ஜிங் சர்பேஸ் உள்ளது. இந்த இடத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    • சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
    • முன்னதாக இந்த ஹெட்போன் மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சோனி நிறுவனத்தின் WH 1000XM5 நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட புது ஹெட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி WH 1000XM5 மாடலில் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 உள்ளது. இது சோனியின் ஹெச்டி தர நாய்ஸ் கேன்சலிங் பிராசஸரின் முழு திறனை வெளிக்கொண்டு வரும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 மில்லிமீட்டர் டிரைவர் யூனிட், எடை குறைந்த, உறுதியான டோம் கார்பன் பைபர் பாகங்களை பயன்படுத்தி சவுண்ட் தரத்தை அதிக இயற்கையாக மாற்றுகிறது. இதில் கூகுள் பாஸ்ட் பேர் அம்சம் உள்ளது. இதை கொண்டு ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் மிக எளிதில் கனெக்ட் செய்து விட முடியும். இத்துடன் LDAC கோடெக் சப்போர்ட், DSEE எக்ஸ்டிரீம் மற்றும் நுனுக்கமாக வாய்ஸ் பிக்கப் செய்யும் திறன் உள்ளிட்டவை இந்த ஹெட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.


    சோனி WH 1000XM5 மாடலில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இது ஆம்பியண்ட் சவுண்ட் செட்டிங்ஸ்-ஐ தலைசிறந்த அனுபவம் கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றுகிறது. மேலும் மல்டி பாயிண்க் கனெக்‌ஷன் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு ப்ளூடூத் சாதனங்களுடன் கனெக்ட் செய்ய முடியும். இந்த ஹெட்போன்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், டிசைன் மாற்றப்பட்டு இருப்பதால், சோனி WH 1000XM5 ஹெட்போனை மடிக்க முடியாது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இத்துடன் யுஎஸ்பி சி பவர் டெலிவரி மூலம் மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    இந்தியாவில் சோனி WH 1000XM5 ஹெட்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் மற்றும் shopatsc வலைதளங்களில் இந்த ஹெட்போனிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஹெட்போன் ரூ. 26 ஆயிரத்து 990 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    ×