search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெனிலியா"

    • 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
    • `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடு.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வில்லு படமும் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில் விஜய் நடித்த `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

    `சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

    இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

    'சச்சின்' சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் 'சந்திரமுகி' கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.
    • அமீர்கான் - ஜெனிலியா படப்பிடிப்பின் போது உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    பிரபல இந்தி நடிகர் அமீர்கான்- ஜெனிலியா தேஷ்முக் ஜோடியாக நடிக்கும் இந்தி படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்த படத்தை இயக்குனர் பிஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார்.

    'லால் சிங் சதா' படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய படத்தில்  அமீர்கான் நடிக்க தொடங்கி உள்ளார்.மேலும் இந்த படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை.அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.

    இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.இந்நிலையில் அமீர்கான் - ஜெனிலியா இருவரும் படப்பிடிப்பின் போது செட்டில் உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    அந்த புகைப்படத்தில் ஜெனிலியா வெள்ளை நிற மேலாடை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிக உற்சாகமாக சிரிப்பது போன்றும் அமீர்கான் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து அருகில் அமர்ந்து இருப்பது போன்றும் காணப்படுகிறது.இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    2008 -ல், ஜெனிலியா இம்ரான் கானுடன் 'ஜானே து...யா ஜானே' படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமீர்கானுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்               

        உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ஜெனிலியா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

    பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ஜெனிலியா, தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்று கூறியது. ஆனால், எனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.

    ×