search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கனமழை... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்
    X

    கனமழை... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்

    • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் சூழல் உருவாகி உள்ளது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஆங்காங்கே ஒருசில பகுதிகளில் இப்போது மழையும் பெய்ய தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 16-ந்தேதி வரை விட்டுவிட்டு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மற்றும் ஒடிசாவின் சில பகுதிகள் கேரளா, மாகே, கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகாவில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×