search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனது சொந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்யும் காங்கிரஸ்
    X

    தனது சொந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்யும் காங்கிரஸ்

    • பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில், அரவிந்த் தாமோர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது.
    • காங்கிரஸ், பாஜக இடையே காணப்பட்ட போட்டி தாமோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக மாறியது.

    பன்ஸ்வாரா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் முதல்கட்டமாக 12 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி 13 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இத்தொகுதியில், அரவிந்த் தாமோர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. இருந்தபோதிலும் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தேதிக்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளரான ராஜ்குமார் ரோட்டை ஆதரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து அரவிந்த் தாமோர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், பாஜக இடையே காணப்பட்ட போட்டி தாமோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டியாக மாறியது.

    இதனால் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட அரவிந்த் தாமோருக்கு வாக்களிக்க வேண்டாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×