search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம்
    X

    கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
    • வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால் இடைக்கால ஜாமின் குறித்து பரிலீசனை.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த தடயங்களும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் 2023-க்கு முந்தையவை. அனைத்தும் ஜூலை 2023-ல் உடையது. மணிஷ் சிசோடியா வழக்கில் உள்ள ஆதாரங்கள் அப்படியே உள்ளது" என கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் "இந்த வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால், நாங்கள் தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கலாம். 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதுவரை முடிவு செய்யவில்லை.

    இரு தரப்பினரும் ஆச்சரியப்படாமல் இருக்க நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு இரு தரப்பிலும் தயாராகி வரவேண்டும்" கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×