search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் திருடிய பைக்குடன் திண்டுக்கல்லில் சுற்றும் வாலிபர்- உரிமையாளருக்கு அபராதம் வந்ததால் அதிர்ச்சி
    X

    சென்னையில் திருடிய பைக்குடன் திண்டுக்கல்லில் சுற்றும் வாலிபர்- உரிமையாளருக்கு அபராதம் வந்ததால் அதிர்ச்சி

    • வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • திருடிய சமயத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றி அந்த ஆசாமி வேறு கலருடன் சுற்றி வருகிறார்.

    திண்டுக்கல்:

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவரது மனைவி வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 01.10.2020ம் ஆண்டு அலுவலகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது. இதுகுறித்து வண்டலூர் போலீஸ் நிலையத்தில் ரியாஸ் அகமது புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கைக்கான ரசீது ரியாஸ் அகமதுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்பு பலமுறை போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது பைக் சிக்கவில்லை என கூறிவந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருடுபோன பைக்குடன் ஒருவர் சென்றுள்ளார். அந்த பைக்கை போக்குவரத்து காவலர்கள் நிறுத்த முயன்ற போது அவர் நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து அவரது வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.3 ஆயிரம் அபராதம் கட்டச்சொல்லி ரியாஸ் அகமதுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வண்டலூர் போலீஸ் நிலைத்தில் விபரம் கேட்டறிந்தார். பின்னர் ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் அவர்கள் கேட்டபோது சம்மந்தப்பட்ட பைக் திருடு போய்விட்டது என்றால் அதுகுறித்து உடனடியாக கணினியில் ஏற்றப்பட்டு விடும். அந்த சமயத்தில் உரிமையாளருக்கும், அந்த வாகனத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவ்வாறு உள்ள சூழ்நிலையில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் விதிமீறளுக்காக எவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது என கேட்டனர்.

    அந்த வாகனம் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் சுற்றி வருவதால் விரைவில் அதனை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி திருடிய சமயத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றி அந்த ஆசாமி வேறு கலருடன் சுற்றி வருகிறார். ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் உரிமையாளருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் இருப்பதால் உடனடியாக அவரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×