search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா
    X
    திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா

    திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா 28-ந்தேதி கொடியேற்றம்

    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திர கந்தூரி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடி ஏற்றுவது 28-ந்தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெறுகிறது. இதற்கு திட்டுவிளை யு.எல்.எஸ்.எம்.டி. முஸ்லிம் ஜமாத் முத்தவல்லி மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். திட்டுவிளை ஜூம்மா பள்ளிவாசல் துணை பேஸ் இமாம் ஷேக்ஹஸன் அலியார் ஸமதானி ஆலிம் வரவேற்று பேசுகிறார். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் முகமது ஹனீபா, அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திட்டுவிளை ஜூம்மா பள்ளிவாசல் துணை பேஷ் இமாம் முகமது இப்ராகிம் பைஜி ஆலிம் தொடக்க உரையாற்றுகிறார். இதில் பேராசிரியர் பஷீர் அகமது உஸ்மான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது 3-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா விழா கமிட்டியினர் மற்றும் யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×