search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 எப்போதுமே பேட்ஸ்மேன்களின் போட்டி: இந்த ஐபிஎல் தொடரில் புதிய லெவலை எட்டியுள்ளது- கம்மின்ஸ்
    X

    டி20 எப்போதுமே பேட்ஸ்மேன்களின் போட்டி: இந்த ஐபிஎல் தொடரில் புதிய லெவலை எட்டியுள்ளது- கம்மின்ஸ்

    • பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும்.
    • 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் 2024 சீசனில் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுகிறது. 200 ரன்கள் எளிதாக அடிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் ஆறுமுறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 262 இலங்கை எட்டிப்பிடித்தது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 212 ரன்கள் குவித்தது. பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 134 ரன்னில் சுருண்டது.

    இந்த போட்டிக்குப்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மினஸ் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். தற்போது இந்த ஐபிஎல் தொடரில் முற்றிலும் புதிய லெவலுக்கு சென்றுள்ளது. இந்த லெவலை அமைக்கும்போது, நாம் உண்மையிலேயே ஆக்ரோஷமாக விளையாடும் சில வீரர்களை பெற்றிருந்தால், அதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும், தொடரில் வெற்றி பெற முடியும்.

    வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சு ஆப்சனை பெறவில்லை. பந்து ஸ்விங் ஆகும் வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. ஆடுகளமும் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருப்பதில்லை.

    இதனால் பெரும்பாலான நேரங்களில் முயற்சி செய்வதும், குறைந்த ரன்கள் கொடுக்க முயற்சிப்பதும் விக்கெட் எடுப்பதற்கு சிறந்த வழி. பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதேவேளையில் 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்.

    நாங்கள் சேஸிங் செய்யும் வகையில் நன்றாக தயாராகி இருந்தோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சிறந்த வகையில் அமையவில்லை. அந்த விசயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×