என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
புஷ்பா இயக்குனருடன் இணையும் ராம்சரண்
- சிக்கலான மற்றும் பல அடுக்கு திரைக்கதைகளை அவர் படங்களில் வைத்து இயக்குவதில் சுகுமார் திறம் பெற்றவர்
- சுகுமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரங்கஸ்தலம். இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.
தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் சுகுமார். நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2004 ஆண்டு வெளிவந்த ஆர்யா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் மூலமாகதான் அல்லு அர்ஜூனின் புகழ் பலமடங்கு உயரியது.
சிக்கலான மற்றும் பல அடுக்கு திரைக்கதைகளை அவர் படங்களில் வைத்து இயக்குவதில் சுகுமார் திறம் பெற்றவர். ஆர்யா 2, 100% லவ், ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் சுகுமார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா பாகம் 1 உலகளவில் மிகப்பெரிய வெற்றியை வாங்கி கொடுத்தது. 2021 ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் புஷ்பா திரைப்படம் அதிக வசூலினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த படம் புஷ்பா திரைப்படம் தான்.
ராம் சரண், சமந்தா ,பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு போன்ற பல நடிகர்களின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரங்கஸ்தலம். இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.
இந்நிலையில் சுகுமார் அடுத்ததாக ராம் சரணை வைத்து படம் இயக்கவுள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படமானது ராம் சரணின் 17- வது படமாகும். #Raring2conquer என்ற தலைப்பில் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு பிறகு சுகுமார் அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கும் புஷ்பா பகுதி 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.