search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஸ்கோடா கார்களில் ADAS வசதி - வெளியான சூப்பர் தகவல்

    • ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
    • கார்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் கார் மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஸ்கோடா இந்தியா பிரான்டு இயக்குநர் பீட்டர் ஜனேபா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


    ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற மிட்சைஸ் செடான்கள், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்போது லெவல் 2 ஆட்டோனோமஸ் டிரைவல் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதி வழங்கப்பட்டு விட்டது. எனினும், ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜனேபா, "ADAS 2.0-வை பொருத்தவரை MQB AO-IN பிளாட்ஃபார்மில் உருவான அனைத்து கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களிலும் படிப்படியாக வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.


    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய சந்தை மிகவும் அதிவேகமான ஒன்று. எங்களது போட்டியாளர்கள் இன்றைய சூழலில் அதிவேகமாக செயல்படுகின்றனர், ஆனால் நாங்கள் விரைவில் இந்த நிலையை எட்டிவிடுவோம். ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மட்டுமின்றி இடையில் வேறுசிலவற்றையும் கொண்டுவருவோம்."

    "அந்த வகையில், 2.5 மாடல்களான காம்பேக்ட் எஸ்.யு.வி.-யில் தற்போது குஷக் மாடலில் இல்லாத சில அம்சங்களும் வழங்கப்படும். இதில் ஒன்று 360-டிகிரி கேமரா," என்று அவர் தெரிவித்தார்.

    அதன்படி மார்ச் 2025 அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்களில் லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    Next Story
    ×