search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    625கிமீ ரேன்ஜ் வழங்கும் ஆடி எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அறிமுகம் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

    • இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் பி.பி.இ. பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் டூயல் மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த கார் மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியூ6 இ டிரான் மாடல் ஆடியின் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த காரின் முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், அழகிய தோற்றம் கொண்ட டி.ஆர்.எல்.கள், முன்புறம் அகலமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் ஆடியின் முற்றிலும் புதிய டிஜிட்டல் லைட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட், 14.5 இன்ச் MMI டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்டீரிங் வீலில் பட்டன்களுக்கு மாற்றாக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த எஸ்.யு.வி.-யில் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


    பவர்டிரெயினை பொருத்தவரை ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 382 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 100 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    Next Story
    ×