search icon
என் மலர்tooltip icon

    கார்

    டாடா கார் வாங்க சூப்பர் சான்ஸ்.. இத்தனை லட்சத்துக்கு சலுகைகளா?
    X

    டாடா கார் வாங்க சூப்பர் சான்ஸ்.. இத்தனை லட்சத்துக்கு சலுகைகளா?

    • இந்த மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் எதுவும் பொருந்தாது.
    • இந்த கார் மூன்றுவித எரிபொருள் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்களை அறிவித்துள்ளனர். இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள், பன்ச் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் எதுவும் பொருந்தாது.

    டாடா நிறுவனத்தின் ஃபுல் சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஹேரியர் வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. டாடா ஹேரியர் மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.


    இந்திய சந்தையில் டாடா ஹேரியர் மாடல் மஹிந்திரா XUV700, எம்.ஜி. ஹெக்டார் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாடா சஃபாரி மாடலுக்கும் ரூ. 1.50 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. 5 சீட்டர் வேரியண்ட் என்பதோடு, இந்த மாடலின் திறன் மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்டவை ஹேரியர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா டிகோர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 65 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் CNG மாடலுக்கு மட்டும் ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் ஹோண்டா அமேஸ், மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.


    பிரீமியம் ஹேச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்றுவித எரிபொருள் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×