search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS125
    X

    இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS125

    • புதிய மாடலும் மெல்லிய தோற்றம் கொண்டிருக்கிறது.
    • இதன் டி.ஆர்.எல். டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் NS125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்துள்ளது. புதிய NS125 மாடல், 2024 NS160 மற்றும் NS200 மாடல்களுக்கு வழங்கப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

    வடிவமைப்பில் புதிய பஜாஜ் பல்சர் NS125 மாடல் மெல்லிய தோற்றம், மஸ்குலர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம், ஃபியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல்கள் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. இதன் ஹெட்லைட் மாற்றப்பட்டு இருக்கிறது. 2024 பஜாஜ் பல்சர் NS125 மாடலில் தண்டர் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பல்சர் NS125 மாடலிலும் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.8 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் எஸ்.எம்.எஸ்., கால் நோட்டிபிகேஷன், போன் பேட்டரி லெவல் மற்றும் இதர விவரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இத்துடன் யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் உள்ளது.

    2024 பஜாஜ் பல்சர் NS125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 922, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வெர்ஷனை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் புதிய பல்சர் NS125 பைக் ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மற்றும் டி.வி.எஸ். ரைடர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×