இந்தியா

பிரசாரத்தில் 50 பேர் கூட இல்லை- சமூக வலைதளங்களில் கேலிக்கு ஆளான குஷ்பு

Published On 2024-05-01 07:13 GMT   |   Update On 2024-05-01 08:19 GMT
  • ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
  • ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

திருப்பதி:

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய மறுத்தார்.

தற்போது தெலுங்கானா, ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறாார்.

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

குஷ்புவின் தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 50 பேர் கூட இல்லை. இதனால் குஷ்பு எதுவும் பேசாமல் கைகூப்பிய படி வாகனத்தில் சென்றார். ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள போதிலும் 50 பேர் கூட இல்லாததால் இதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

வீடியோவை பார்த்தவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்புவின் பிரசாரத்திற்கு 50 பேர் கூட இல்லை என கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News