search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
    X

    ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

    ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியதை அடுத்து சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு 2019 முதல் அமலுக்கு வருகிறது.
    வியன்னா:

    ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    ஆஸ்திரிய பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு 2019 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.



    உலகிலேயே நெதர்லாந்தில் தான் கடந்த 2001-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கின.

    அதை முன்னுதாரணம் காட்டி ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளிக்கவில்லை.
    Next Story
    ×