search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோஸ்டாரிகா நாட்டில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
    X

    கோஸ்டாரிகா நாட்டில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

    வட அமெரிக்கா இடையே பசிபிக் கடலில் கோஸ்டாரிகா என்ற தீவில் 6.5 ரிக்டரில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மின்சார சப்ளை பாதிக்கப்பட்டது.
    சான்ஜோஸ்:

    வட அமெரிக்கா இடையே பசிபிக் கடலில் கோஸ்டாரிகா என்ற தீவு நாடு உள்ளது. இன்று அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. புகழ் பெற்ற சுற்றுலா நகரமான ஜகோ அருகே உண்டான நில நடுக்கத்தால் தலைநகர் சான்ஜோஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

    இங்கு பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. 6.5 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால் பல இடங்களில் மின்சார சப்ளை பாதிக்கப்பட்டது. செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டது.

    ஆனால் உயிர் சேதம், காயம் மற்றும் பொருட் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கோஸ்டாரிகாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான பனாமா மற்றும் நிகாரகுவாவிலும் உணரப்பட்டது. அங்கும் சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
    Next Story
    ×