search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய பயணத்தை தொடங்கினார் டிரம்ப் - வட கொரியா விவகாரத்தில் தீர்வு பிறக்குமா?
    X

    ஆசிய பயணத்தை தொடங்கினார் டிரம்ப் - வட கொரியா விவகாரத்தில் தீர்வு பிறக்குமா?

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது ஆசிய பயணத்தை தொடங்கினார் இந்த பயணத்தால், வடகொரியா விவகாரத் தில் தீர்வு பிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ஹோனலுலு:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது ஆசிய பயணத்தை தொடங்கினார் இந்த பயணத்தால், வடகொரியா விவகாரத் தில் தீர்வு பிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். 1991-1992 ஆண்டு களில் அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்த ஜார்ஜ் எச். டபிள்யு. புஷ்தான் ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். அவருக்கு பின் இப்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு நீண்ட சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அவர் தனது மனைவி மெலனியா டிரம்புடன் நேற்று முன்தினம் ஹவாய் தீவுக்கு சென்றார். அங்கு அவர் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் அரிசோனா நினைவு சின்னத்துக்கு படகில் சென்றார். அங்கு அவரும் அவரது மனைவியும், வெள்ளைப்பூக்களை தண்ணீரில் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    அங்கிருந்து அவர்கள் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றார்கள்.



    ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடனும், கோல்ப் வீரர் ஹிடேகி மாட்சோயாமாவுட னும் டிரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோல்ப் விளையாடுகிறார்.

    அகசகா அரண்மனையில் ஜப்பான் மன்னர் குடும்பத்தினரை, டிரம்ப், ஷின்ஜோ அபே குடும்பத்தின ருடன் சென்று சந்தித்து பேசுகிறார்.  வடகொரியாவால் கடத்தப் பட்ட ஜப்பானியர்களின் குடும்பங்களையும் டிரம்ப் சந்தித்து பேச ஏற்பாடு ஆகி உள்ளது.

    ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, 7-ந் தேதி டிரம்ப் தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு செல்கிறார். அங்கு அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அந்த நாட்டின் பாராளுமன்றத்திலும் டிரம்ப் உரை ஆற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    8-ந் தேதி சீன தலைநகர் பீஜிங் செல்கிற டிரம்ப், அங்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுவது டன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    ஜின்பிங்குடனான சந்திப் பின்போது வடகொரியா அணு ஆயுத சோதனைகளை யும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை களையும் கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்குமாறு டிரம்ப் கேட்டுக்கொள்வார்.

    10-ந் தேதி டிரம்ப் தம்பதியர் வியட்நாம் போகிறார்கள். அங்கு டனாங் நகரில் அபெக் என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டு பேசுகிறார். 11-ந் தேதி வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லும் டிரம்ப், அங்கு அதிபர் டை குவாங் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

    12-ந் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு டிரம்ப் தம்பதியர் செல்கின்றனர். ஆசியன் நாடுகள் அமைப்பின் 50-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறுகிற இரவு விருந்தில் டிரம்ப் கலந்துகொள்கிறார். 13-ந் தேதி மணிலாவில் ஆசியன் நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்வதுடன், அந்த நாட்டின் அதிபர் ரோட்ரிகோ யுடர்டேயுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அத்துடன் ஆசிய நாடுகளுக்கு டிரம்ப் மேற்கொள்கிற சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது.

    டிரம்ப் பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் கூறப்பட்டாலும், வடகொரியா அணு ஆயுத திட்டங்களை கைவிட வைப்பதில் ஆசிய நாடுகள் ஆற்ற வேண்டிய பங்கு பணிகள் குறித்து தான் சந்திக்கிற தலைவர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்பது உறுதி.

    தனது பயணத்துக்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “ (ஆசிய தலைவர்கள் சந்திப்பின்போது) நாங்கள் வர்த்தகம் தொடர்பாக பேசுவோம். அதே நேரத்தில் வடகொரியா வுக்கு எதிராக சர்வதேச அளவில் நாடுகளை ஒன்று திரட்டுவோம் என்பதுவும் வெளிப்படையானது. வட கொரியாவுக்கு எதிரான தலைவர்களை பட்டியலிடு வோம். நாடுகளையும் பட்டியல் போடுவோம். என்ன நடக்கிறது என பார்ப்போம். ஆனால் இந்தப் பயணம் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.

    எனவே டிரம்பின் ஆசிய பயணத்தின்போது, வடகொரியா விவகாரத்தில் தீர்வு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் நிலவுகிறது.

    Next Story
    ×