search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
    X

    ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சி நடந்து வருகிறது. இதை அகற்றுவதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகர் காபூலிலும், நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக பாகிஸ்தானையொட்டி அமைந்த எல்லையோர மாகாணமான நங்கார்ஹரில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்து ஆயுதங்களை குவித்து வைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள சாவ்கே மாவட்டத்தில் நேற்று அமெரிக்க ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்குதலை நிகழ்த்தின. இந்த தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இருப்பினும், உள்ளூர் எம்.பி. இந்த தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறியுள்ளார். அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படையினர் இந்த தாக்குதல் குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×