search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கத்தால் காலியான லாகூர் தொகுதியில் அவர் மனைவி வேட்பு மனு தாக்கல்
    X

    நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கத்தால் காலியான லாகூர் தொகுதியில் அவர் மனைவி வேட்பு மனு தாக்கல்

    பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து காலியான லாகூர் தொகுதியில் அவரது மனைவி குல்ஸூம் நவாஸ் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பனாமாகேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற லாகூர் பாராளுமன்ற தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. 

    இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் சபாஸ் ஷெரிப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பஞ்சாப் மாகாண முதல்வராக இருப்பதால் அவர் இந்த பதவிக்கு போட்டியிட்டால் அந்த மாகாணத்தில் கட்சியின் பலம் குறையும் என கட்சியின் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

    எனவே யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி லாகூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை 35 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி வருகிற 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற  26ம் தேதி வெளியிடப்படுமென பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
    Next Story
    ×